Sep 25, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் ஆற்றில் மிதந்த இரு ஆண் சடலங்கள் - போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

கெடாவில் ஆற்றில் மிதந்த இரு ஆண் சடலங்கள் - போலீசார் விசாரணை

Share:

அலோர் ஸ்டார், ஜூன்.14-

கெடா மாநிலத்தில் அம்பாங் ஜாஜார் அருகே, ஆற்றில் இன்று, அடுத்தடுத்து மீட்கப்பட்ட இரு ஆண் சடலங்களில் ஒன்று, இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட 16 வயது சிறுவனுடையது என்பதை அம்மாநில போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், இந்த இரு உயிரிழப்புகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 16 வயது சிறுவன் சாவ் சீ வான் என்றும், மற்றொரு நபர் 46 வயதான முஹமட் அமீன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்படும் அச்சிறுவன், கழுத்தில் அணிந்திருந்த பதக்கத்துடன் கூடிய சங்கிலியின் மூலம் அவரது குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News