Jun 14, 2026
Thisaigal NewsYouTube
பேராக் மாநிலத்தில் புலியைப் பிடிக்கச் சென்ற அதிகாரிகள் காட்டு யானைகளைப் பிடித்தனர்
தற்போதைய செய்திகள்

பேராக் மாநிலத்தில் புலியைப் பிடிக்கச் சென்ற அதிகாரிகள் காட்டு யானைகளைப் பிடித்தனர்

Share:

கெரிக், ஜூன்.14-

பேராக் மாநிலம், கெரிக், கம்போங் போங்கோர் பகுதியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்கச் சென்ற அதிகாரிகளின் கண்களில் 11 காட்டு யானைகள் சிக்கியதையடுத்து, யானைகளை பிடிக்கும் நடவடிக்கையாக அது திசை திரும்பியுள்ளது.

இது குறித்து கம்போங் போங்கோர் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் முஹமட் ஃகாஸாலி சாலே கூறுகையில், கிராமத்தில் புலி ஒன்று நடமாடியது கண்டறியப்பட்ட நிலையில், அதனைப் பிடிக்க கடந்த வியாழக்கிழமை சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை பெர்ஹிலிதான் அதிகாரிகள் பொருத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேமரா காட்சிகளில், அக்கிராமத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்த 11 காட்டு யானைகள் சிக்கியதையடுத்து, இந்த நடவடிக்கையானது யானைகளைப் பிடிப்பதற்காகத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் புலி ஒன்று கிராம மக்களின் கால்நடைகளை தாக்கியதாகவும், கிராமவாசிகளின் கண்களில் அப்புலி தென்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெர்ஹிலிதான் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Related News