Jan 19, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் இரண்டு சிறப்பு அதிகாரிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் அந்தரங்க செயலாளர் மகேஸ்வரி மற்றும் சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி சுகுமாரன் ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ள அந்த அதிகாரிகள் ஆவர்.
அவர்களுக்கு எதிராக பெறப்பட்டிருந்த 4 நாள் தடுப்பு காவல் இன்று முடிவடைந்ததாக எஸ்.பி.ஆர்.எம். கூறியது.

அவர்களுடன் சேர்ந்து கைதுசெய்யப்பட்ட ஈப்போவைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அது உறுதிப்படுத்தியது.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணைக்காக அந்த மூவரும் எஸ்.பி.ஆர்.எம். மினால் கைதுசெய்யப்பட்டனர்.

Related News