கோலாலம்பூர், செப்டம்பர்.28-
மருத்துவர்களின் மிகக் குறைவான ஓன்-கால் ஊதிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் உடனே எழுப்பும்படி, மலேசிய மருத்துவச் சங்கம் எம்எம்ஏ நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளது. உயிரைக் காக்கும் இந்தச் சேவைக்காக, மருத்துவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வெறும் 9 ரிங்கிட் 16 சென் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இந்த ஊதியம் பத்தாண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படவில்லை என்றும் எம்எம்ஏவின் தலைவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர்களின் உந்துதல் குறைவதாலும், சோர்வாலும் நோயாளிகளின் பாதுகாப்பு நேரடியாகப் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார். எனவே, மருத்துவர்களின் ஊதிய உயர்வு என்பது சலுகை அல்ல, அது நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சுகாதார அமைப்பின் நீண்ட கால நிலைத்தன்மைக்காக இந்த விவாதத்திற்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.








