மலேசியாவிற்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகள் மற்றும் வெளிநாட்டு வருகையாளர்கள் எம்டிஏசி எனப்படும் மலேசிய டிஜிட்டல் வருகை அட்டையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற புதிய நிபந்தனை, வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்த்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா உட்பட சில நாடுகளுக்கு விசா விலக்களிப்பை அரசாங்கம் வழங்கியதைத் தொடர்ந்து டிசம்பர் முதல் தேதியிலிருந்து நாட்டிற்குள் நுழைய விரும்பும் வெளிநாட்டவர்கள் எம்டிஏசி எனப்படும் மலேசிய இலக்கவியல் அட்டையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று குடிநுழைவுத்துறை அறிவித்து இருந்தது.
இந்த டிஜிட்டல் அட்டை சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர், மலேசியாவிற்கு வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு சமர்ப்பித்தாக வேண்டும். மலேசியாவிற்கு வந்து அடையும் தினம்,புறப்படும் தினம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்த டிஜிட்டல் அட்டையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த புதிய நிபந்தனை இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் வெளிநாட்டுவர்களுக்கு இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளதாக சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.








