கோலாலம்பூர், அக்டோபர்.27-
வாகனமோட்டிகள் தங்களது நிலுவையிலுள்ள சம்மன்களை, 50 சதவீத தள்ளுபடியுடன் செலுத்த, இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது ஜேபிஜே.
இந்த தள்ளுபடியானது அனைத்து வகை சம்மன்களுக்கும் பொருந்தும் என்றாலும் கூட, சட்டப்படி அணுக வேண்டிய சில வகை சம்மன்கள் இதில் சேராது என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இந்த இரண்டு மாத காலச் சலுகையைப் பயன்படுத்தி, தங்களது சம்மன்களை தள்ளுபடியுடன் செலுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்மன்களை ஜேபிஜே கவுண்டர்களில் நேரடியாகவோ, அல்லது இணையம் வழியாகவும் செலுத்தலாம் என்றும் ஏடி ஃபாட்லி குறிப்பிட்டுள்ளார்.








