நடந்து முடிந்த பகாங், பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை ஆதரித்து பேசியதாக கூறப்படும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டது தொடர்பில் அவரை பகாங் மாநில போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி , பெந்தோங், மன்சிஸ் போலீஸ் நிலையத்தில் சனூசி நூரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யாஹயா தெரிவித்தார்.
சனூசி நூர், சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது தொடர்பில் அவருக்கு எதிராக கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








