Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தந்தையை மண்வெட்டியால் கொன்று உடலை சாலையோரத்தில் எறிந்தனர்
தற்போதைய செய்திகள்

தந்தையை மண்வெட்டியால் கொன்று உடலை சாலையோரத்தில் எறிந்தனர்

Share:

கடந்த சனிக்கிழமை , 40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் இன்று அவரைக் கைது செய்துள்ளனர்.

74 வயதான அந்த முதியவரை மண் அள்ளும் கருவியைக் கொண்டு தலை மற்றும் இடது கை பகுதிகளில் பலமாக தாக்கி உள்ள அடையாளங்கள் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என பெட்டாலிங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார். கொலையுண்ட அந்த 74 வயது பெரியவர் மண் அள்ளும் கருவி கொண்டு தாக்கப்பட்டப்பின் திரை சீலை கொண்டு சுருட்டப்பட்டு சுங்காய் வே சொகுசு அடுக்குமாடி வீட்டின் முன் உள்ள சாலையில் வீசி எறியப்பட்டுள்ளார் என போலீஸ் தலைவர் கூறினார்.

அந்த முதியவரின் வீட்டை போலீசார் பரிசோதனை இட்டப்போது அங்கு சுவரில் ரத்தக் கரைகள் தென்பட்டதாகவும் அடித்து உடலை இழுத்து வந்ததற்கான அடையாளங்களும் காரில் ரத்தக் கரைகளும் தென்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News