கோலாலம்பூர், நவம்பர்.13-
மலேசியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களை மறுசீரமைத்து, புதுப் பொலிவுடன் மாற்ற வேண்டும் என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
2026-ஆம் ஆண்டிற்காக விசிட் மலேசியா திட்டத்தின் படி, அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்க மலேசியா தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
லிட்டல் இந்தியா, பிரிக்பீல்ட்ஸ் மற்றும் ஜாலான் அலோர் போன்ற முக்கிய சுற்றுலாத் தளங்களில் உள்ள நடைபாதைகள், விளக்குகள் போன்றவற்றைச் சீரமைக்க நகர் மன்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஷாஹாருடின் அபு சோஹோட் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறிய அளவிலான வசதிக் குறைபாடு கூட, சமூக ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டு மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அதிகாரிகள் அதனை இப்போதே சரி செய்து விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








