Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்துடன் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்துடன் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Share:

பினாங்கு, ஜூன் 18-

விரைவு பேருந்துடனான சாலை விபத்தில், புரோட்டான் ஜென்2 வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்த வேளை, மற்றொருவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

பினாங்கு, சுங்கை பக்காப்-புக்கு அருகாமையிலுள்ள வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 155.9ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலையில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

அதிகாலை மணி 4.36 அளவில் அவசர அழைப்பு கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த, சுங்கை பக்காப் தீயணைப்பு மீட்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள், வாகனத்தினுள் ஓட்டுநர் இருக்கையிலும் பயணிக்கான இருக்கையிலும் சிக்குண்ட 30 மற்றும் 40 வயதுடைய அவ்விரு ஆடவர்களை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வந்தனர்.

அதில், 30 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ பணியாளர்கள் உறுதிபடுத்திய வேளை, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக, சுங்கை பக்காப் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

முகத்தில் காயத்திற்கு இலக்காகியிருந்த மற்றொரு நபர், சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பட்டதாக, பினாங்கு தீயணைப்பு துறை கூறியது.

இவ்வேளையில், அந்த விபத்தை உறுதிபடுத்திய போலீஸ், அது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு