Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மகளின் பல்கலைக்கழக பதிவு கட்டணத்திற்கு நிதி திரட்டுவதில் சின்னக்கருப்பன் வெற்றி பெற்றார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மகளின் பல்கலைக்கழக பதிவு கட்டணத்திற்கு நிதி திரட்டுவதில் சின்னக்கருப்பன் வெற்றி பெற்றார்

கோத்தா பாரு, அக்டோபர் 02-

கிளந்தான், மலேசிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ள தனது மகளை அந்த உயர்க்கல்விக்கூடத்தில் சேர்ப்பதற்கு பதிவு கட்டணத்தொகை பற்றாக்குறையினால் சிரமத்தை எதிர்நோக்கிய ஒரு முன்னாள் அரசு ஊழியரான 67 வயது M. சின்னக்கருப்பன்,வாட்ஸ்அப் செயலி வாயிலாக அந்தப் பணத்தை திரட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்.

தமது 20 வயது மகள் கலைமகள், அந்தப் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் நல்வாழ்வுத்துறைக்கான விருந்தோம்பல் துறையில் இளம் கலைப்பட்டப்படிபிற்கு இடம் கிடைத்துள்ளதாக பேரா, பெங்கலன் ஹுலு- வைச் சேர்ந்தவரான சின்னக்கருப்பன் குறிப்பிட்டார்.

எனினும் பதிவுக்கட்டணமாக மூவாயிரம் வெள்ளி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் அத்தொகையை திரட்ட தம்மிடம் போதிய பணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கிராம மக்களின் உதவியை நாடுவதற்கு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தமது கிராம மக்களின் வாட்ஸ்அப் புலனத்தில் மகளின் பட்டப்படிப்பு குறித்து செய்தியை பதிவேற்றம் செய்து, நன்கொடை கோரியதாக சின்னக்கருப்பன் தெரிவித்தார்.

தம் மீது மிகுந்த அனுதாபம் காட்டிய கிராமத்து மக்கள், இரண்டு மணி நேரத்திலேயே மூவாயிரம் வெள்ளியை நன்கொடையாக தந்து, தமது மகளின் கல்விக்கு உதவியிருப்பதாக இன்று கிளந்தான், மலேசியப் பல்கலைக்கழகத்தில் தமது மகளை பதிவு செய்வதற்கு வந்திருந்த சின்னக்கருப்பன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →