Oct 18, 2026
Thisaigal NewsYouTube

Air Asia சேவைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Air Asia சேவைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

கோத்தா பாரு,செப்டம்பர் 21-

சிக்கன கட்டண விமான நிறுவனமான Air Asia, தனது சேவைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவரும், குபாங் கெரியன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது குபாங் கெரியன் நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது தாம் பயணம் செய்யவிருந்த Air Asia விமானம், காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துவான் இப்ராஹிம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தம்மைப் போலவே வேறு பயணிகளும் தாங்கள் செல்லவிருந்த வழித்தடங்களுக்கான விமானப் புறப்பாடு நேரம், தாமதப்பட்டு இருப்பதைக் கண்டதாக துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

விமானப் புறப்பாடு நேர அட்டைவனையைப் பார்க்கும்பொழுது 10 - க்கும் மேற்பட்ட விமானங்கள் கால தாமதமாக புறப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பட்டார்.

Air Asia உலகத்தின் மிகச்சிறந்த சிக்கன கட்டண விமான நிறுவனமாக திகழ்கிறது. இந்நிலையில் அந்த விமான நிறுவனம் தனது சேவைத் தரத்தை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகும் என்று துவான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →