Oct 14, 2026
Thisaigal NewsYouTube

வீடுயின்றி வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு உதவிக்கரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜார்ஜ்டவுன், பிப்.20-

பினாங்கு மாநில அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, மாநில அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்குக்கு ஏற்ப மக்களின் வீட்டுப் பிரச்னையை தீர்க்க வீடமைப்புத்திட்டங்களை உருவாக்குவது இவரின் தலையாயப் பணியாகும்.

அதேவேளையில் தான் சார்ந்துள்ள சமூகத்தின் வறுமை நிலை, வீடுயில்லா பிரச்னைகள் தன்னுடைய கவனத்திற்கு வரும் போது, அவர்களை தேடிச் சென்று உதவிக் கரம் நீட்டுவதை தனது தார்மீக கடப்பாடாக கொண்டு இருப்பது, டத்தோஸ்ரீ சுந்தராஜுவின் தனித்துவமாகும்.

பினாங்கு, சுங்கைப் பாக்காப்பில் வீடுயின்றி, கைவிடப்பட்ட நிலையில் தொழிற்சாலையின் கடை லாட் ஒன்றில் அறவே வசதிகளின்றி மூன்று சகோதர- சகோதரிகள் , 7 சிறுப்பிள்ளைகள் மிக அவலமான நிலையில், வறுமை சூழலில் அற்றைக்கூலியான தனது மாமாவின் ஓர் ஆள் சம்பாத்தியத்தில் ஓர் இந்திய குடும்பத்தினர் ஒட்டுக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

அந்த குடும்பத்தினர் இன்னும் நான்கு நாட்களில் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் எங்கே செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல், தவித்து வந்த நிலையில் அவர்களின் நிலை குறித்து தகவல் பெற்ற டத்தோஸ்ரீ சுந்தராஜு மறுநாளே மாநில வீடமைப்பு வாரிய அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை காண நேரடியாக களம் இறங்கியது, மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியது.

சமையல் பொருட்கள் வாங்குவதற்கு அந்த குடும்பத்தினரின் கைசெலவுக்கு 500 ரிங்கிட்டை கொடுத்து உதவியதுடன் , மாநில வீடமைப்பு வாரியத்தின் மலிவு விலை வீட்டை பெற்றுத் தருவதில், காலம் தாழ்த்தாமல், அவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வீட்டையும் காட்டுவதற்கு அக்குடும்பத்தினரை கையோடு அழைத்துச் சென்றார் சுந்தரராஜு .

18 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள அந்த வீட்டிற்கு செலுத்த வேண்டிய முன்பணமான 1,020 ரிங்கிட்டை தாமே செலுத்துவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு உறுதி கூறியதுடன், மாதம் மாதம் செலுத்த வேண்டிய தவணைப்பணமான 120 ரிங்கிட்டை மட்டும் செலுத்துமாறு அந்த குடும்பத்தைக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் 15 ஆண்டுகளில் அந்த வீடு அவர்களுக்கு சொந்தாமாகும் என்றார்.

புதிய இடத்தில் நிறைய வேலைகள் வாய்ப்புகள் உள்ளன.இரண்டு வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பிள்ளைகளும் அருகில் உள்ள தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்பதற்கு பள்ளி தலைமையாசிரியருடன் பேசிவிட்டதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தது, வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருந்த அந்த இந்திய குடும்பத்தினருக்கு புதிய விடியலை ஏற்படுத்தியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை