Oct 14, 2026
Thisaigal NewsYouTube

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தொழில்திறன் பயிற்சிகள் முக்கியம் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளியிலிருந்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடங்களைக் கற்பது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதால், சிலர் கல்வியில் மேலும் பின்தங்கும் நிலை ஏற்படலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, வழக்கமான கல்விப் பாதைக்கு அப்பாலும் தொழில்திறன் பயிற்சிகள் மூலம் முன்னேற வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கிந்தா மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள, ஆறாம் ஆண்டு மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் செல்வதற்கான தயார்நிலைப் பட்டறை, அக்டோபர் 24ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேரா மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

இத்தகைய முயற்சிகளை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், மாணவர்களின் முன்னேற்றத்துக்குப் பேராக் அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின