கெடா மாநிலம் கோலா கெடாவில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், 8,190 லிட்டர் டீசல் மற்றும் அதனை ஏற்றிச் சென்ற லாரி உட்பட ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கெடா மாநில அமலாக்கப் பிரிவும் மலேசிய கடல்சார் போலீஸ் படையும் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், டீசலின் மதிப்பு ரிங்கிட் 39,148 என்றும், லாரியின் மதிப்பு ரிங்கிட் 50 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிம நிபந்தனைகளை மீறியது, இருப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காதது உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.









