Oct 17, 2026
Thisaigal NewsYouTube

உணவு விலையை 5 விழுக்காடு உயர்த்துவதா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உணவு விலையை 5 விழுக்காடு உயர்த்துவதா?

கோலாலம்பூர் நவ. 13-


அடுத்த ஆண்டு முதல் உணவுப் பதார்த்தங்களின் விலையை 5 விழுக்காடு உயர்த்துவதற்கு பரிந்துரையை முன்வைத்துள்ள ஜோகூர் இந்திய முஸ்லீம் உணவக நடத்துநர்கள் சங்கத்திற்கு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு காரணம் கோரும் கடிதம் அனுப்பும் என்று அதன் அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வு குறித்து அந்த இந்திய முஸ்லிம் உணவக நடத்துநர் சங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாளை வியாழக்கிழமை காரணம் கோரும் கடிதம் அனுப்பப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

2011 ஆம் ஆண்டு விலை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அந்த சங்கத்திற்கு சம்மன் அனுப்பப்படும். விலை உயர்விற்கான உரிய விளக்கத்தை அளிக்க மறுக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அர்மிஸான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →