பெர்சத்து கட்சி துணைத் தலைவர் உறுதி
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் தோல்விக் கண்ட போதிலும் அடுத்த பொதுத் தேர்தலில் அதேதொகுதியில் அன்வாரை தம்மால் தோற்கடிக்க இயலும் என்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அமாட் ஃபைஸால் அஸுமு உறுதி பூண்டுள்ளார்.
அன்வாரால் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற முடியும். மறுமுறை அதே தொகுதியில் அவர் போட்டியிடுவாரேயானால் அவரை தம்மால் நிச்சயம் தோற்கடிக்க முடியும் என்று மலேசிய கினிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருமான அமாட் ஃபைஸால் அஸுமு குறிப்பிட்டுள்ளார்.








