Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஆரோக்கிய மையத்தில் அதிரடி ரெய்டு: அரசு ஊழியர்கள் உட்பட 201 ஆண்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆரோக்கிய மையத்தில் அதிரடி ரெய்டு: அரசு ஊழியர்கள் உட்பட 201 ஆண்கள் கைது

கோலாலம்பூர், நவம்பர்.29-

கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள வளாகம் ஒன்றில், நேற்று கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லும், கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய துறையான ஜாவியும் இணைந்து நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 201 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வளாகத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து இந்த அமலாக்க நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், அந்த வளாகத்திலுள்ள ஆரோக்கிய மையம் ஒன்றில் திடீரென நுழைந்த அதிகாரிகள், 19 வயது முதல் 60 வயது வரையிலான 201 ஆண்களைக் கைது செய்துள்ளனர்.

அவர்களில், 17 பேர் அரசு ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சை நிபுணர், அரசு தரப்பு துணை வழக்கறிஞர், நிர்வாகம் மற்றும் இராஜதந்திர அதிகாரி, ஆசிரியர் மற்றும் பல அமலாக்க அதிகாரிகளும் அவர்களில் அடங்குவர்.

ஆரோக்கிய மையம் என்ற பெயரில் அங்கு சட்டவிரோதமாகப் பாலியல் சேவைகளும் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பலர் தகவல் பகிர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த மையமானது கடந்த இரண்டு வாரங்களாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததாக கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அஸானி ஓமார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →