ஜார்ஜ்டவுன், அக்டோபர்.28-
அம்புலன்ஸ் செல்வதற்கு வழிவிடாமல் இடையூறு விளைவித்த வயது குறைந்த ஐந்து மோட்டார் சைக்கிளோட்டிகளைப் போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து இன்னமும் பள்ளிப் படிப்பைத் தொடரும் 17 வயதுடைய ஐந்து இளைஞர்கள் நேற்று பிற்பகல் 3 மணிக்கும், 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.








