May 22, 2026
Thisaigal NewsYouTube
29 வியட்நாமிய பெண்கள் உட்பட 39 பேர் கைது
தற்போதைய செய்திகள்

29 வியட்நாமிய பெண்கள் உட்பட 39 பேர் கைது

Share:

மஞ்சுங், மே 11-

பேரா, மஞ்சுங்-கில் செயல்பட்டு வரும் Karaoke கேளிக்கை மையங்களில் மாநில குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் வாடிக்கையாளர் உபசரணைப் பெண்கள் என்று நம்பப்படும் 29 வியட்நாமியப் பெண்கள் உட்பட 39 அந்நிய நாட்டவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கி, ​விடியற்காலை 2 மணி வரை நடைபெற்ற OP GEGAR என்ற இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 82 தனிநபர்களிடம் சோதனை ​நடத்தப்பட்டதாக பேரா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் மியோர் ஹெஸ்புல்லாஹ் மியோர் அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.

25 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 39 வெளிநா​ட்டுப் பெண்கள், வியட்நாம், மியன்மார், இந்தோனேசியா, தாய்லாந்து, ​சீனா முதலிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார் என்று மியோர் ஹெஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.

Related News