Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தென் தாய்லாந்தில் அமைதிப் பேச்சுவார்தைக்கு மலேசியா உதவும்
தற்போதைய செய்திகள்

தென் தாய்லாந்தில் அமைதிப் பேச்சுவார்தைக்கு மலேசியா உதவும்

Share:

தென் தாய்லாந்து,ஆ௧ஸ்ட் 02-

தென் தாய்லாந்தில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கான செயல்முறை திட்டத்தை துரிதப்படுத்துவற்கு மலேசியா உதவும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

மலேசியாவின் இந்த முயற்சி தொடர்பான பரிந்துரை தாய்லாந்திடமும், அந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களிடமும் முன்வைக்கப்பட்டு, அவர்களிடமே விடப்பட்டுள்ளது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெறுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு மலேசியா ஓர் உந்தும் சக்தியாக விளங்கும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

தென் தாய்லாந்தில் அமைதி நிலவுவதற்கான இந்த பேச்சுவார்த்தை தாய்லாந்தின் உள்நாட்டு விவகாரமாகும். இது மலேசியாவின் பிரச்னை அல்ல.

ஆனால், தாய்லாந்துடன் நட்பு பாராட்டி வருகின்ற அண்டை நாடு என்ற முறையில் இந்த அமைதி முயற்சிக்கு திறம்பட ஆதரவளிக்க மலேசியா ஒன்றிணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தாய்லாந்து Narathiwat மாநிலத்தில் Sungai Golok – கில் இன்று காலையில் தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin- னுடன் அப்பகுதியை பார்வையிடும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இதனை குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை