கோலாலம்பூர், ஜூலை.31-
சோதனை நடவடிக்கையின் போது போலீஸ்காரர் ஒருவர், கத்திக் குத்துக்கு ஆளானார். இந்தச் சம்பவம் இன்று மதியம், கோலாலம்பூர், ஜாலான் பூடு, ஜாலான் யியூவில் நிகழ்ந்தது.
போலீஸ்காரரை வயிற்றில் கத்தியால் குத்திய 56 வயதுடைய நபர், அவ்விடத்திலேயே வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார். அந்த நபருக்கு ஏற்கனவே 14 குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
புடு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள், குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான நபரைத் தடுத்து நிறுத்தி, அவரின் அடையாள ஆவணங்களைப் பரிசோதிக்க முற்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வயிற்றில் ஆழமான கத்திக் குத்துக்கு ஆளான போலீஸ்காரர் செராஸ், சான்செலர் துவாங்கு மூரிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேகப் பேர்வழி பயன்படுத்தியக் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார், அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிடுவர் என்று வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.








