பத்து பஹாட், நவம்பர்.11-
ஜோகூர், குளுவாங், ஜாலான் ஆயர் ஹீத்தாமில் இன்று காலை 9.40 மணியளவில் ஒரு டன் லோரியும், Four Wheel Drive Isuzu Dmax வாகனமும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் Isuzu Dmax வாகனமோட்டி உயிரிழந்தார்.
வாகனம் உருகுலைந்த நிலையில் இருக்கையின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட ஒரு காப்புறுதி முகவரான 31 வயது முகமட் சால்ரிஸால் ரொஹானி என்பவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
குளுவாங், யாப் தாவ் சாவைச் சேர்ந்த அவர், குளுவாங்கிலிருந்து பத்து பஹாட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. இடிபாடுகளிலிருந்து அவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.








