Sep 15, 2026
Thisaigal NewsYouTube
நேபாளில் சிக்கிய 77 மலேசியர்கள் மீட்பு… 55 பேரைத் தேடும் பணி தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

நேபாளில் சிக்கிய 77 மலேசியர்கள் மீட்பு… 55 பேரைத் தேடும் பணி தொடர்கிறது

Share:

நேபாளிலும் திபெத்திலும் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட 77 மலேசியர்களும், மலேசியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் நேபாள தலைநகர் காட்மண்டுவுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.

அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளையில், மேலும் 55 மலேசியர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஃபஹ்மி, இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட ஹசான் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேபாளில் நடைபெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில், இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,500 பேர் காணாமல் போயுள்ளனர்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்