நாட்டில் மானியமில்லா அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலையும் நாளை முதல் 5 சென் குறைகிறது.
செப்டம்பர் 3 முதல் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரிங்கிட் 4.25 ஆகக் குறைக்கப்படுகிறது. இதற்கு முன்பு அது ரிங்கிட் 4.30 ஆக இருந்தது.
மானியமில்லா ரோன் 95 விலை ரிங்கிட் 3.77 ஆகவும், மானியமில்லா டீசல் விலை ரிங்கிட் 4.67 ஆகவும் குறைகின்றன.
இதனிடையே, மானிய விலையில் வழங்கப்படும் பூடி மடானி ரோன் 95-ன் கீழ் ரோன் 95 விலை லிட்டருக்கு ரிங்கிட் 1.99 ஆகவும், பூடி மடானி டீசல்-ன் கீழ் டீசல் விலை ரிங்கிட் 2.10 ஆகவும் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, ரோன் 95-க்கு அரசு லிட்டருக்கு ரிங்கிட் 1.78 மானியமாக வழங்குகிறது.
அதாவது, மானியமில்லா விலையுடன் ஒப்பிடுகையில், 47 விழுக்காடு மானியச் சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.








