Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்ற  கலைக்கப்படுவதற்கு ஒருநாள் முன் நிதி ஒதுக்கீடு… பிரச்சினையில்லை என்கிறது எஸ்.பி.ஆர்.எம்
தற்போதைய செய்திகள்

சட்டமன்ற கலைக்கப்படுவதற்கு ஒருநாள் முன் நிதி ஒதுக்கீடு… பிரச்சினையில்லை என்கிறது எஸ்.பி.ஆர்.எம்

Share:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பாக, பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரிங்கிட் 180,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டதில் சட்டரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்துள்ளது.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் , ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் சட்டத்திற்கும் அரசியலமைப்புக்கும் முரணாக இல்லாத எந்தக் கொள்கையையும் வகுக்கவும், நிதி ஒதுக்கீட்டை அறிவிக்கவும் அதிகாரம் கொண்டுள்ளது என்றார்.

ஆனால், சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாகச் செயல்படும் நிலையில் புதிய கொள்கைகளையோ, அடுத்த அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய நிதி ஒதுக்கீடுகளையோ வழங்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு வழங்கப்பட்ட இந்த நிதியில் ஊழல் அல்லது முறைகேடு இல்லை என்று எஸ்.பி.ஆர்.எம் உறுதி செய்யவில்லை என்றும் அப்துல் ஹலிம் கூறினார்.

அத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிடைக்கும் உண்மைகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையிலேயே எஸ்.பி.ஆர்.எம் மதிப்பீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி