Sep 12, 2026
Thisaigal NewsYouTube
2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை அழைக்கும் திட்டமா? புத்ராஜெயா மறுப்பு
தற்போதைய செய்திகள்

2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை அழைக்கும் திட்டமா? புத்ராஜெயா மறுப்பு

Share:

அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை புத்ராஜெயா மறுத்துள்ளது.

அரசாங்கப் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறுகையில், இந்தத் தகவல் வங்கதேசத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரால் வெளியிடப்பட்டதாகவும், அது அந்நாட்டு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

நேற்று வங்கதேச துணை அமைச்சர் மீர் ஷாஹே ஆலம் வெளியிட்ட தகவலில் , அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியா அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

இதனிடையே, மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள 1,476 அகதிகள், தாங்கள் விருப்பத்துடன் நாடு திரும்புவதாகக் கூறி ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.

மியான்மர் இன்னும் பாதுகாப்பான நாடாக இல்லாத நிலையில், அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்த ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் கவலை தொடர்பாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கம் அளித்ததாகவும் ஃபஹ்மி கூறினார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்