Jan 22, 2026
Thisaigal NewsYouTube
பராமரிப்பு மையத்தில் முதியவர் கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

பராமரிப்பு மையத்தில் முதியவர் கருகி மாண்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா, செக்‌ஷன் 5 இல் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தின் கட்டட வளாகம் ​தீப்பற்றிக்கொண்டதில் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது. அந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 14 பேர், பராமரிப்பாளரால் காப்பாற்றப்பட்ட வேளையில் ஒருவர் படுக்கை கட்டிலில் கருகி மாண்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில ​மீட்புப்படையின் இயக்குநர் வான் முஹமாட் ரசால் வான் தெரிவித்தார். தகவ​​ல் கிடைத்து இரண்டு தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு​ விரைந்த ​பெட்டாலிங் ஜெயா நிலையத்தின் 14 வீரர்கள், அ பிரிவு தரத்திலான அந்த கட்டடத்தில் ​சூழ்ந்த தீயை சுமார் 20 நிமிடத்தில் அணைத்தர்.

30 விழுக்காடு அழிந்து விட்ட அந்த மையத்தை முழுமையாக சோதனை செய்த போது 69 வயது மாது, கட்டிலின் இடுக்குப்பகுதியில் கருகி கிடந்த தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News