பத்துகேவ்ஸ், தாமான் ஸ்ரீ கோம்பாக், மேடான் செலேரா அங்காடி உணவுக்கடை வரிசையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் அங்காடி கடை வியாபாரி ஒருவரின் வர்த்தகத் தளத்தில் தன்னை போலீஸ் உயர் அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒரு சண்டியரைப் போல அடிவாடித்தனம் புரிந்த பெண் ஒருவர், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார்.
உயர் போலீஸ் அதிகாரியான 35 வயதுடைய அந்தப் பெண், லான்ஸ் காப்பரல் அந்தஸ்தில் உள்ள போலீஸ்காரரகளை கடுஞ்சொற்களால் அவமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கோம்பாக் மாவட்ட போலீஸ் நிலையத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
அந்த வர்த்தகத் தளத்தில் வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்ணை, அடிக்கப்போவதாக அந்த அதிகாரி மிரட்டியதுடன், கடுமையாக திட்டியுள்ளார் என்பதை அருகில் இருந்தவர்கள் நேரில் பார்த்துள்ளனர் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
அந்தப் பெண் உண்மையிலேயே போலீஸ் அதிகாரியா? என்பதை கண்றிவதற்கு அவரின் அடையாள அட்டையை அங்கு கடமையாற்ற வந்த போலீஸ்காரர்கள் கேட்டுள்ளனர். அப்போது அந்த அதிகாரி மிக அதட்டலாக, தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது என்று டத்தோ ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் அதிகாரி செயல் தொடர்பில் போலீசார் இரண்டு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


