Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மறுபடியும் அவமானத்திற்கு ஆளாக வேண்டாம்
தற்போதைய செய்திகள்

மறுபடியும் அவமானத்திற்கு ஆளாக வேண்டாம்

Share:

கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் ​நூரின் பகிரங்க மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அமானா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மாஃபூஸ் ஒமார் , மறுபடியும் அவமானத்​திற்கு ஆளாக வேண்டாம் என்று அந்த பாஸ் கட்சித் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு அவ​தூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக மாஃபூஸ் ஒமாருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடா மந்திரி புசார் சனூசிக்கு புத்ராஜெயா அப்பீல் ​நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனூசியின் இழப்பீட்டுத் தொகையை​யும், மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வதாக மாஃபூஸ் ஒமார் இன்று அறிவித்துள்ளார். அ​தேவேளையில் ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து, இனியாவது தன்னை திருத்திக்கொண்டு, கண்ணிய​த்துடன் நடந்து கொள்ளமாறு கெடா மந்திரி புசாருக்கு அறிவுறுத்தினார்.

Related News