Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நவசண்டி மகா யாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

நவசண்டி மகா யாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Share:

பத்துமலை திருத்தலத்தில் வரும் அக்டோபர் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த நவசண்டி மகா யாகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிரிதொரு தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அறிவித்துள்ளார்.

அடுத்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி பத்துமலைத்திருத்தலத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, 54 ஹோம குண்டங்களுடன் சகல சௌபாக்கியங்களும் அருளும் ஶ்ரீ ஸம்ரிதி மங்கள நவசண்டி மகா யாகத்தை தேவஸ்தானம் ஏற்று நடத்துவதாக இருந்தது என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

நவசண்டி மகா யாகம் ஒத்திவைக்கப்பட்டதற்காக பக்த பெருமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெகரியத்திற்கு தேவஸ்தானம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா,
தலைவர், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானம்

Related News