சிரம்பான், நவம்பர்.06-
நீலாயில் உள்ள ஒரு பேட்டரி தொழிற்சாலையில், நேற்று புதன்கிழமை குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பணியாற்றிய 184 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 20 முதல் 49 வயதுக்குட்பட்ட வங்கதேசம், மியன்மார், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 163 ஆண்களும், 21 பெண்களும் அடங்குவர் என்று நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் கென்னித் டான் ஐ கியாங் தெரிவித்தார்.
நேற்று காலை 7.50 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையின் போது, பலர் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதாகவும் கென்னித் டான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, லெங்கேங் குடிநுழைவு அலுவலகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.








