கோலாலம்பூர், நவம்பர்.13-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரதான வர்த்தக மையத்தின் வணிகத் தலங்களின் வியாபாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது.
மூன்று தினங்களுக்கு முன்பு மஸ்ஜிட் இந்தியா ஜாலான் பூனுஸில் ஏற்பட்ட நில அமிழ்வு காரணமாக சாலை மூடப்பட்டது.
அதனைச் சீரமைப்புக்கும் பணியில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட பல்வேறு அரசாங்க ஏஜென்சிகள் துரிதமாக ஈடுபட்டு, நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜாலான்மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றியுள்ள வணிகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன என்று அந்த வர்த்தகத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.








