பாசீர் கூடாங், ஆகஸ்ட்.24-
கடந்த வியாழக்கிழமை கோத்தா மாசாய் பகுதியில், போலி காவல் படை அதிகாரிகள் என நடித்து ஒரு காதல் இணையினரை மிரட்டிப் பணம் பறித்த இரு பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் இருந்த காதலர்களை மிரட்டி ஈராயிரம் ரிங்கிட் கேட்ட போது, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் இரு சந்தேக நபர்களையும் போலீசார் கைது செய்தனர் என ஶ்ரீ ஆலாம் காவல் படைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் முகமட் சொஹைமி தெரிவித்தார்.
விசாரணையில், இருவரில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான நான்கு குற்றப் பின்னணியும், மற்றவருக்கு ஒரு குற்றப் பின்னணியும் இருப்பது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








