ஈப்போ, செப்டம்பர்.13-
பேரா, சிம்பாங் பூலாய், கம்போங் கெராவாட், ஓராங் அஸ்லி இடுகாட்டின் அருகில் உள்ள ஆற்றின் ஓரத்தில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆடவரின் சடலம், ஒரு கொலையே என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மழுங்கிய பொருளைக் கொண்டு, அந்த ஆடவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்பது சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








