Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி பொது உபசரிப்பில் சுல்தான் நஸ்ரின் ஷா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி பொது உபசரிப்பில் சுல்தான் நஸ்ரின் ஷா

பேரா மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு, இன்று சனிக்கிழமை ஈப்போ, இந்திரா முலியா அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, பேரா அரசியார் துவாங்கு ஸாரா சலிம், ராஜா மூடா ஜப்பார் ராஜா மூடா மூசா, ராஜா டி ஹிலிர் ராஜா இஸ்கண்டார் சுல்கர்னேன் சுல்தான் இட்ரிஸ் ஷா மற்றும் ராஜா புவான் மூடா துவாங்கு சொராயா அப்துல் ஹலிம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாலை 3.30 மணிக்கு பிரதான மண்டபத்திற்கு வருகை புரிந்த அரச பேராளர்களை பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட் மற்றும் அவரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ அசேர் ஸுபின் வரவேற்றனர்.

இந்தியர்களின் பாரம்பரிய உணவு மற்றும் பரதநாட்டின் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் மூவின மக்கள் என்ற அளவில் சுமார் எட்டாயிரம் பேர் கலந்து கொண்டர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →