Oct 30, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சுகளுக்கிடையே கருத்து வேறுபாடு: அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டதாக அர்த்தமல்ல

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சுகளுக்கிடையே கருத்து வேறுபாடு: அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டதாக அர்த்தமல்ல

அமைச்சுகளுக்கிடையே கருத்துகள் அல்லது அணுகுமுறைகளில் வேறுபாடுகள் இருப்பது, அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் குறிக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் அமைச்சின் பொறுப்புகள், அதிகார வரம்புகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப கொள்கைகள் குறித்து விவாதிக்கும்போது இத்தகைய வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது என்று அவர் கூறினார்.

மக்களின் நலன், நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு அமைச்சுகளுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு உறுதிப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் இன்று வெளியிடப்பட்ட எழுத்துபூர்வ பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார். நிதி அமைச்சுக்கும் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சுக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் பொதுவெளியில் முன்வைக்கப்படுவதற்கான காரணம் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் எழுப்பிய கேள்விக்கு அன்வார் பதிலளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பினாங்கு நிலச்சரிவு: சுயேச்சை விசாரணை நடத்த அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

பினாங்கு நிலச்சரிவு: சுயேச்சை விசாரணை நடத்த அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதியை விரைந்து வழங்க பிரகாஷ் வலியுறுத்தல்

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான நிதியை விரைந்து வழங்க பிரகாஷ் வலியுறுத்தல்

குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைப் போராட்டம்: முன்னாள் நீதிபதி நளினிக்குத் துணை அமைச்சர் தியோ பாராட்டு

குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைப் போராட்டம்: முன்னாள் நீதிபதி நளினிக்குத் துணை அமைச்சர் தியோ பாராட்டு

தீபாவளி விடுமுறை: இந்து அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க செனட்டர் கோரிக்கை

தீபாவளி விடுமுறை: இந்து அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க செனட்டர் கோரிக்கை

13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மடானி அரசாங்கம் ஒப்பந்தம்: இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை நிறைவேற்ற நிபந்தனை

13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மடானி அரசாங்கம் ஒப்பந்தம்: இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை நிறைவேற்ற நிபந்தனை

தைப்பிங் சிறை கலவரத்தில் கைதி மரணம்: சிசிடிவி காட்சிகளைக் கோரி குடும்பத்தினர் அப்பீல்

தைப்பிங் சிறை கலவரத்தில் கைதி மரணம்: சிசிடிவி காட்சிகளைக் கோரி குடும்பத்தினர் அப்பீல்