Nov 14, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு நிலச்சரிவு: சுயேச்சை விசாரணை நடத்த அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு நிலச்சரிவு: சுயேச்சை விசாரணை நடத்த அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

பினாங்கு மாநிலம் பாயா தெருபோங் பகுதியில் நிகழ்ந்த உயிரிழப்பை ஏற்படுத்திய நிலச்சரிவு குறித்து சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் ஶ்ரீ ரம்பாய் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் 73 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி ராமன் தலைமையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்த அமைப்புகள், நிலச்சரிவுக்கான காரணம், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றன.

மேலும், மலைப்பகுதி மேம்பாட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.

பினாங்கு மாநில எதிர்க்கட்சித் தலைவர் முஹமட் ஃபௌஸி யுசோஃப்பும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அமெரிக்கா, சீனாவுடன் நல்லுறவு தொடரும் – பொருளாதார நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அன்வார் உறுதி!

அமெரிக்கா, சீனாவுடன் நல்லுறவு தொடரும் – பொருளாதார நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அன்வார் உறுதி!

கெடாவில் புதிய மலேசியா–தாய்லாந்து எல்லை நுழைவாயில் – பெலான்டிக்கில் அமைக்கத் திட்டம்

கெடாவில் புதிய மலேசியா–தாய்லாந்து எல்லை நுழைவாயில் – பெலான்டிக்கில் அமைக்கத் திட்டம்

மாணவர், சமூகப் பயண அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தங்கும் வெளிநாட்டினர்

மாணவர், சமூகப் பயண அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தங்கும் வெளிநாட்டினர்

பேராக் மாநில தீபாவளிக் கொண்டாட்டம் – 15 ஆயிரம் மக்களுடன் இணைந்த சுல்தான் நஸ்ரின்

பேராக் மாநில தீபாவளிக் கொண்டாட்டம் – 15 ஆயிரம் மக்களுடன் இணைந்த சுல்தான் நஸ்ரின்

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்