பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டத்திற்கான திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மேலவை உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசிய ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சி, பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு முதலியவற்றினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில் இது போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவது ஏற்புடையதுதானா? என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று செனட்டர் டி லியான் கெர் கேட்டுக்கொண்டார்.
மூன்று நாள் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அந்த மேலவை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.








