கோலாலம்பூர், நவம்பர்.13-
சபா மாநிலத்திற்கு 40 விழுக்காடு வருவாயை மத்திய அரசாங்கம் திருப்பித் தர வேண்டும் வேண்டும் என்ற கோத்தா கினாபாலு உயர்நீதிமன்ற தீர்ப்பின் சில அம்சங்களை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து முந்தைய மத்திய அரசாங்கங்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள கடமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அந்த பகுதியை மட்டுமே எதிர்த்து மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யுமே தவிர 40 விழுக்காடு வருவாயைத் திருப்பி தர வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்க்காது என்று பிரதமர் விளக்கினார்.








