சிகாமட், செப்டம்பர்.08-
சிகாமட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட நில நடுக்கங்களினால் சேதமடைந்த, 15 அரசுக் கட்டிடங்களை மறுசீரமைக்க, 550,500 ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, சிகாமட் பொது மருத்துவமனை, பண்டார் புத்ரா சுகாதார மையம், சிகாமட் கொமுனிடி காலேஜ் உள்ளிட்ட பல இடங்களில் பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில், இச்செலவுகள் மதிப்பிடப்பட்டுள்ளதாக பொதுப்பணி துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் அனைத்தும் சிறிய அளவிலானவை தான் என்றும், கட்டமைப்பில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் அஹ்மாட் மஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.








