கிள்ளான், செப்டம்பர்.26-
சிலாங்கூர் பட்டத்து இளவரசர் ராஜா மூடா சிலாங்கூர், தெங்கு அமீர் இப்னி சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் அரச திருமண வைபவம், கிள்ளான், இஸ்தானா அலாம் ஷா அரண்மனையில் நடைபெறுவதை முன்னிட்டு அரச நகரான கிள்ளானில் நாளை செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 29 ஆம் தேதி திங்கட்கிழமை வரை பல்வேறு பிரதான சாலைகள் மூடப்படவிருகின்றன.
மொத்தம் 10 பிரதான சாலைகள் மூடப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளன. நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் திருமண வைபவம் சுமூகமாக நடைபெறும் வரை அனைத்து தரப்பினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதான சாலைகள் மூடப்படும் என்று தென் கிள்ளான் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
Jalan Istana-விற்கு செல்லும் Jalan Tengku Diaudin,/ Jalan Istana- விலிருந்து Simpang Lima சாலை வட்டம்,/ Jalan Istana-விலிருந்து Jalan Stadium Sultan Suleiman,/ Jalan Istana-விலிருந்து Lorong Tingkat,/ Jalan Istana-விலிருந்து Jalan Pegawai,/ Jalan Istana-விலிருந்து Jalan Tengku Kelana 2,/ Simpang Lima சாலை வட்டத்திலிருந்து Jalan Bukit Istana ஆகிய சாலைகள் மூடப்படவிருக்கின்றன.
அதே வேளையில் Jalan Dato’ Hamzah-விலிருந்து Jalan Tengku Kelana மற்றும் Jalan Raja Jumaat-டிலிருந்து Jalan Istana வரை இரு பிரதான சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் கிள்ளானுக்குச் செல்கின்றவர்கள் அல்லது கிள்ளானில் வசிப்பவர்கள், நாளை முதல் திங்கட்கிழமை வரை தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளும்படி தென் கிள்ளான் மாவட்ட போலீசார் ஆலோசனை கூறியுள்ளனர்.








