Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் மாநில தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் மாநில தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்

டிச.6-

சரவாக் கூச்சிங் நகரில் உள்ள Jalan Matangஇல் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரம் கோழிகள் எரிந்து சாம்பலாகின என சரவாக் மாநில தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 3.43 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. Petra Jaya, Batu Lintang தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். ஏனெனில் அந்த இடத்தில் தீயணைப்பு நீர் தெளிப்பான் இல்லை. அருகில் உள்ள ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தீயை அணைக்க வேண்டியிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.

இந்தத் தீ விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகளுடன், கோழிப்பண்ணையும் முற்றிலும் அழிந்துவிட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை எனவும் . கோழிகள் மட்டுமே இறந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →