ஈப்போ, செப்டம்பர்.30-
ஈப்போ, செம்மோர் அருகேயுள்ள கம்போங் கோல குவாங் என்ற பகுதியிலுள்ள வீடு ஒன்றில், இறந்த நிலையில் காணப்பட்ட பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
நேற்று திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில், மியன்மார் நாட்டவர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அப்பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால், அவரது கணவர் என நம்பப்படும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக அப்பெண்ணின் சடலம் தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








