Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மெரீனாவில் இந்திய விமானப்படையின் சாகசம்: அதிக வெயிலால் ஐந்து பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மெரீனாவில் இந்திய விமானப்படையின் சாகசம்: அதிக வெயிலால் ஐந்து பேர் பலி

அக்டோபர் 07-

தமிழ்நாட்டின் சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிய ஐந்து பேர் வெயிலின் தாக்கத்தால் மரணமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று(07.10.2024) இடம்பெற்றுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளன.

சாகச நிகழ்ச்சி

முற்பகல் 11 மணிக்கு ஆரம்பித்த இந்த சாகச நிகழ்ச்சி பிற்பகல் 1 மணிவரை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு சென்றிருந்த இலட்சக்கணக்கானோர், நிகழ்ச்சியைக் கண்டுகளித்துவிட்டு திரும்பியபோது, சனநெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

அத்துடன் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் சுமார் 90 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு, அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →