காஜாங், அக்டோபர்.29-
தனது முன்னாள் காதலியின் அந்தரங்கப் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் பரப்பியதற்காக 40 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் கல்லூரி ஒன்று அளித்த புகாரின் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணியளவில், காஜாங், சௌஜானா புத்ராவில் அந்நபர் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்துள்ளார்.
புகாரின்படி, அக்கல்லூரியைச் சேர்ந்த 17 வயதான முன்னாள் மாணவியின், அந்தரங்கமான புகைப்படங்களை, மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவில் அவர் பரப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டம், பிரிவு 509 மற்றும் பல்லூடக தொலைத்தொடர்பு சட்டம் 1998, பிரிவு 233 -இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








