Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்

நவ. 28-

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பது மற்றும் மருத்துவ காப்புறுதி பாலிசிகளின் பிரமியக் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் தகவல் குறித்து உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மசீச கேட்டுக்கொண்டுள்ளது.

விருப்பம் போல் மருத்துவ சிகிச்சைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பது வாயிலாக காப்புறுதி நிறுவனங்கள் நடப்பு சந்தை நிலையை தவறாக பயன்படுத்திக்கொள்வதை தடுக்க இந்த விரிவான விசாரணை அவசியமாகும் என்ற மசீச உதவித் தலைவர் டத்தோ லாரன்ஸ் லோ தெரிவித்தார்.

அண்மையில் பத்திரிகை தகவல்படி மருத்துவ காப்புறுதி பாலிசிகளுக்கான பிரமியத் தொகையை சில முன்னணி காப்புறுதி நிறுவனங்கள் 40 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தியிருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலைத் தொடர்ந்து லாரன்ஸ் லோ இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →