Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஜைனுதீன் மறைவு, பேரிழப்பாகும் : துன் மகாதீர் அனுதாபம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜைனுதீன் மறைவு, பேரிழப்பாகும் : துன் மகாதீர் அனுதாபம்

கோலாலம்பூர், நவ. 13-


முன்னாள் நிதி அமைச்சரும், தனது நெருங்கிய நண்பருமான துன் டாயிம் ஸைனுதின் மறைவிற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார்.

தமது நெருங்கிய நண்பரின் மறைவு, தமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அந்த உன்னத தலைவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக தமது அனுதாப செய்தியில் துன் மகாதீர் தெரிவித்தார்.

துன் டாயிமின் அந்திம காலத்தில் அவருக்கு நேர்ந்த சம்பவங்கள் தமக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது என்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள குருஞ்செய்தியில் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →