Jul 18, 2026
Thisaigal NewsYouTube
புடி மதானி டீசல் மானியக் கோட்டா: பொருளாதார நிலையைப் பொறுத்தே இறுதி முடிவு
தற்போதைய செய்திகள்

புடி மதானி டீசல் மானியக் கோட்டா: பொருளாதார நிலையைப் பொறுத்தே இறுதி முடிவு

Share:

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள போதிலும், 'புடி மதானி' திட்டத்தின் டீசல் மானியக் கோட்டாவை மீண்டும் பழைய அளவான மாதத்திற்கு 300 லிட்டராக உயர்த்துவது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைப் பொறுத்தே அமையும் என நிதியமைச்சரின் அரசியல் செயலாளர் முஹம்மது கமில் அப்துல் முனிம் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பினால் கோட்டாவை உயர்த்துவதில் சிக்கல் இருக்காது எனக் குறிப்பிட்ட அவர், உலகளாவிய எண்ணெய் விலை நிலைபெறவும், போக்குவரத்து மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் இயல்பு நிலைக்கு வரவும் 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்றார்.

எனவே, அரசு தற்போதைய சூழலைக் கூர்ந்து கவனித்து வருவதாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முஹம்மது கமில் கூறினார்.

Related News