Jul 16, 2026
Thisaigal NewsYouTube
எஸ்டிபிஎம் தேர்வில் சஸ்மிதா  4.00 சிஜிபிஏ பெற்று சாதனை
தற்போதைய செய்திகள்

எஸ்டிபிஎம் தேர்வில் சஸ்மிதா 4.00 சிஜிபிஏ பெற்று சாதனை

Share:

நேற்று வெளியிடப்பட்ட எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகளில் தெலுக் இந்தான், செயின்ட் ஆண்டனி தேசிய இடைநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி சஸ்மிதா சிவகுமார் 4.00 சிஜிபிஏ பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் எஸ்டிபிஎம் தேர்விலும் தமிழ், தமிழ் இலக்கியம் உட்பட 11 பாடங்களில் 'ஏ' பெற்று அவர் அசத்தியிருந்தார்.

தனது வெற்றி குறித்துப் பேசிய சஸ்மிதா, "இந்த வெற்றி என் பெற்றோரின் தியாகம், குடும்பத்தின் ஆதரவு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான வழிகாட்டுதலின் பலனாகும்" என நன்றியுடன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வழக்கறிஞராக உருவாக வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ள சஸ்மிதாவின் இந்த சாதனை, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

Related News